கற்பிட்டி நுரைச்சோலை பொலிஸார் தேடும் சந்தேகநபர்கள் - பொதுமக்களிடம் உதவி கோரல்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவக்காடு பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இரண்டு சந்தேகநபர்கள் வீட்டில் இருந்தவர்களை பயமுறுத்தி ரூபா ஒரு கோடி 52 இலட்சத்து 32 ஆயிரம் (ரூ. 15,232,000) பெறுமதியான பணம் மற்றும் சொத்துகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் நரைச்சலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விசாரணைகள் தொடர்பில் சந்தேகநபர் பற்றி முறைப்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைய, குற்ற அறிக்கை பிரிவின் சித்திரக் கலைஞரால் சந்தேகநபர்கள் இருவரின் தோற்றம் வரையப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பின்வுரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு நுரைச்சோலை பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – புத்தளம் பிரிவு : 071 8591289
உதவி பொலிஸ் அத்தியட்சகர் – கற்பிட்டி : 071 8591301
நுரைச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி : 071 8592126
No comments