கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவன் இனான் வாசிப்பு போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 07 ல் கல்வி கற்கும் மாணவன் இப்திகார் மொஹமட் இனான் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற தமிழ்மொழி தின வாசிப்புப் போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்று பாடசாலைக்கும் , கற்பிட்டி கோட்டத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் இவர் தேசிய ரீதியிலான கணித ஒலிம்பியாட் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளதுடன், சிங்கள தின பேச்சுப் போட்டியில் புத்தளம் வலய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்கும், சமூக விஞ்ஞான போட்டியில் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திற்கும், அத்தோடு கலாசார அலுவல்கள் திணைக்களமும் புத்தளம் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய 2023 தேசிய இலக்கிய விழா நிகழ்வில் பாடல் நயம் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள மொஹமட் இனான் கற்பிட்டி பெரியகுடியிருப்பைச் சேர்ந்த எம்.ஐ.எம் இப்திகார் ஆசிரியை எம்.ஜீ.பஜிரியா பர்வின் தம்பதிகளின் புதல்வரும் இமானியின் சகோதரரும் ஆவார்.
No comments