மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் கற்பிட்டியைச் சேர்ந்த 04 மாணவர்களுக்கும் மூன்றாம் இடம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கற்பிட்டி ஸ்ரேபோட் சர்வதேச ஆங்கிலக் கல்லூரியில் நடைபெற்று வரும் யூசிமாஸ் சென்டரில் கல்வி பயிலும் 04 மாணவர்கள் சர்வதேச மனக்கணித போட்டிக்கு தெரிவாகி மலேசியா பயணமானார்கள்.
மலேசியா கோலாலம்பூரில் ஞாயிறு நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டிக்கு 80 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கற்பிட்டியைச் சேர்ந்த ஜேசுதாசன் தபேரேரா மரிய சந்துனி, சகாய நிரோஷன் யேன் றொசல்டா, சகாய நிரோஷன் யேன் றச்சிலி , சரீப் சறூன் மொஹமட் முஸாரீப் ஆகிய நான்கு மாணவர்கள் கற்பிட்டி ஸ்ரேபோட் சர்வதேச ஆங்கிலக் கல்லூரியில் இயங்கும் யூசிமாஸ் செனாடர் ஊடாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 60 மாணவர்களில் உள்ளடக்கப்பட்டனர்.
கற்பிட்டி சார்பாக கலந்து கொண்ட நான்கு மாணவர்களும் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
 





 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments