JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் - கரைத்தீவு தேசிய பாடசாலையில் முதலாவது சுற்றாடல் குழு அங்குரார்ப்பனம்

(கற்பிட்டி - எம்.எச்.எம் சியாஜ்)

கல்வி அமைச்சும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இணைந்து "சுற்றாடல் எம்மை காக்கும் - நாம் சுற்றாடலை காப்போம்" என்ற எண்ணக் கருவின் அடிப்படையில்  பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டம் வாயிலாக  முதலாவது சுற்றாடல் முன்னோடிக்  குழு புத்தளம்- கரைத்தீவு தேசிய பாடசாலையில்  2023 நவம்பர் 28 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் ஏ.கே நயீமுல்லாஹ்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் ஏ.எச்.எம்.எம் ஷாபி , புத்தளம் வலய சுற்றாடல் ஆணையாளர் பாறூக் பதீன், புத்தளம் தெற்கு கோட்ட சுற்றாடல் ஆணையாளர் ஏ.ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது தரம் 06 க்குமேற்பட்ட மாணவ மாணவிகளை உள்ளடக்கிய 25 மாணவர்கள் சுற்றாடல் முன்னோடிக் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال