கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் விழா!.
👉 பிரியாவிடை வைபவம்
👉 "வைர ஒளி" நூல் வெளியீடு
👉 பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!.
புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முப்பெரும் விழா நேற்று முன்தினம் (17) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் பீ.எம்.முஸ்னி தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் முன்னாள் அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா அன்மையில் ஓய்வு பெற்றார். அன்னாருக்கான பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது. பாடசாலை சமூகத்தால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பழை மாணவிகள் சங்கம், கனமூலை பெரிய பள்ளி நிருவாகம் ஆகியோர் அதிபருக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வின் போது அதிபரின் சேவையைப் பாராட்டி "வைர ஒளி" எனும் நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதற் பிரதியை ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்பு பிரதிகளை புத்தளம் வலய முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான கலாபூஷாணம் ஜவாத் மரைக்கார், இஸட்.ஏ. ஸன்ஹீர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல் விமர்சனத்தை ஒய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ. ஸன்ஹீர் நிகழ்த்தினார்.
இதேவேளை பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாடாசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) எம்.கமலேந்திரன், புத்தளம் தெற்கு கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, புத்தளம் வலய முன்னாள் உதவி கல்விப் பணிப்பாளர்களான கலாபூஷாணம் ஜவாத் மரைக்கார், இஸட்.ஏ. ஸன்ஹீர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன், கனமூலை பெரிய பள்ளித் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.நஜீம் (ஷர்கி) உட்பட உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவின் நிகழ்ச்சி தொகுப்பை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ஜுனைத் எம். ஹாரிஸ் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
No comments