மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா
பெருக்குவட்டான் அல்-மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா இன்று (26) பாடசாலையின் அதிபர் தேசகீர்த்தி எம்.எச்.எம். றாசிக் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக உடப்பு தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. ஜகத் செனரத்ன கலந்துகொண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை அணிவித்து பொறுப்புக்களையும் கடமைகளையும் வழங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வுக்கு நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சிறப்பு அதிதிகளாக பெருக்குவட்டான் கிராம உத்தியோகத்தர் திருமதி பிரியந்தி, சமூர்த்தி அதிகாரி திருமதி கீர்த்தி லதா மற்றும் பெருக்குவட்டான் ஜும்ஆ மஸ்ஜிதின் செயலாளர் ஏ.எம். நாசிக், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஆசிரியர் எஸ்.எல்.எம்..ஜெனீஸ் மற்றும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் பெற்றோர், ஆசிரியர்களுக்கான கல்வி பற்றிய உளவள ஆலோசனைக் கருத்ரங்கினை உளவள ஆலோசகர் பஸ்லால் ஏ..காதர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
No comments