பு/ கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் சந்தை
புத்தளம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த (14) சிறுவர் சந்தை பாடசாலையின் மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் B.M.முஸ்னி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கனமூலை பாடசாலையின் தரம் 1, தரம் 2 மாணவர்களின் சந்தையும் அதேபோன்று கனமூலையில் காணப்படும் நான்கு பாலர் பாடசாலை மாணவர்களின் சந்தையும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில்
1.கனமூலை - மதீனா புரம் அல் பிர்தௌஸ் பாலர் பாடசாலை
2.கனமூலை அல் நூரியா பாலர் பாடசாலை
3.கனமூலை தாஹா பாலர் பாடாசாலை
4.கனமூலை - ரஹ்மத் புரம் நூராணியா பாலர் பாடசாலை
ஆகிய பாடசாலை மாணவச் செல்வங்களின் சந்தை இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், ஏராலமான பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments