ரணிலுக்கும், பெசிலுக்கும் இடையில் சந்திப்பு..
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெசில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு சலுகை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிக்குழாம் தலைமை அதிகாரி சாகல ரட்னாயக்கவும் பங்கேற்றுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தடங்கல் இல்லாத வகையில் மக்களுக்கு சலுகை வழங்கும் வேலைத்திட்டத்தை வரவு செலவுத் திட்டத்தில் சேர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு பெசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.
No comments