Breaking News

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் A.H.M.பௌஸி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா!.


புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம்  மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் A.H.M.பௌஸி கட்டிடத்திற்கான அடிக்கல்  நடும் விழா நேற்று  (21) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.


பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் முன்னாள்  மாகாண சபை உறுப்பினரும், பொது ஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளருமான ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், சயிதா பவுண்டேஷன் பணிப்பாளருமான நௌஸர் பௌஸி சயிதா பவுண்டேஷன் ஊடாக  50X25 நீளம் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்தை  வழங்கியுள்ளார். அதற்கான நிதியினை மூன்றில் ஒரு பகுதி காசோலையை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.எம். ஜெஸீரிடம் இதன் போது கையளித்தார். 



இவ்விழாவிற்கு  பிரதம அதிதியாக முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், சயிதா பவுண்டேஷன் பணிப்பாளருமான நௌஸர் பௌஸி, விஷேட அதிதிகளாக நீர் வழங்கல்,  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.றிஸ்வி, S.H.M. ரபீக் ஆகியரோடு கௌரவ அதிதியாக மதுரங்குளி மேர்ஸி லங்காவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். முனாஸ் (நளீமி) ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவாருமான ஏ.எச்.எம்.ஹாரூன் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், ஏராளமான பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் மழையையும் பொருட்படுத்தாது கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் போது பாடசாலை சார்பாக பிரதம அதிதிக்கு பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் அவர்களினாளும்,  விஷேட அதிதிக்கு பாடாசாலையின் பிரதி அதிபர் ஏ.அபூ அஷ்ரப் அவர்களினாளும் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.


 


இதேவேளை இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகழ்களும்  இடம்பெற்றதோடு, தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள பாடசாலையின் உதைப்பந்தாட்ட  அணியினருக்கு அதிதிகளால் பதக்கம் அணிவித்ததோடு, பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


KMCC   (NS) MEDIA UNIT

























No comments