Breaking News

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் A.H.M.பௌஸி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா!.

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் A.H.M.பௌஸி கட்டிடத்திற்கான அடிக்கல்  நாட்டும் விழா எதிர்வரும் 21/09/2023 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.00pm மணிக்கு  பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெறவுள்ளது.


முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும், பொது ஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளருமான ஏ.எச்.எம். றியாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், சயிதா பவுண்டேஷன் பணிப்பாளருமான நௌஸர் பௌஸி இக்கட்டிடத்தை வழங்கியுள்ளார்.


இவ்விழாவிற்கு 


பிரதம அதிதி

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், சயிதா பவுண்டேஷன் பணிப்பாளருமான நௌஸர் பௌஸி அவர்ளும் 


விஷேட அதிதிகளாக


நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா,


முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.றியாஸ்,  எஸ்.ஆப்தீன் எஹியா,


முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.றிஸ்வி,  என்.எம்.எம்.ஹிஷாம், எஸ்.எச்.எம். ரபீக்.


கௌரவ அதிதிகளாக


அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.நூருல்லாஹ் (நளீமி),


இலங்கை இஸ்லாமிய சென்டர் அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். ஷரூக் (கபூரி),


மதுரங்குளி மேர்ஸி லங்கா & மேர்ஸி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் Dr. பஸ்லுர் ரஹ்மான் (நளீமி),


மதுரங்குளி மேர்ஸி லங்காவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். முனாஸ் (நளீமி),


ISRC அமைப்பின் பணிப்பாளர் முஹம்மத் மிஹ்ழார்.


காரியாலய அதிதிகளாக


புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பதில் பணிப்பாளர் ஏ.எச்.எம். அருஜுன 


புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பிரதிப்  பணிப்பாளர் (அபிவிருத்தி) எம்.ஏ. அனீஸ்


புத்தளம் தெற்கு கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர



ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.




No comments