ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் இன்று (11) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த அமர்வை ஆரம்பித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வொல்க்கர் டர்க் உரையாற்றவுள்ளார். உலக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தலைப்புக்களின் கீழ் 29 கருத்தாடல்கள் இடம்பெறவுள்ளன. இலங்கை சார்பில் பங்கேற்கும் குழுவிற்கு ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக்க தலைமை தாங்குகின்றார். இம்முறை அமர்வில் இலங்கை சார்பில் அரசியல்வாதிகள் எவரும் பங்கேற்கமாட்டார்கள். இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் விருத்தி தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இந்த அமர்வில் முன்வைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments