கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் சுமார் 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. பெய்து வரும் மழையை அடுத்து நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணமாகும் என்று அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 100 முதல் 125 வரையான டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர். மழையுடன் கூடிய காலைநிலை மேலும் தொட வாய்ப்பு இருப்பதால், டெங்கு நோயின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments