விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பதற்கு மயோன் முஸ்தபா அவர்கள் உதாரணமாக திகழ்கிறார்- அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா அனுதாபம்
நூருல் ஹுதா உமர்
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்பதற்கு இன்று காலமான மயோன் முஸ்தபா அவர்கள் உதாரணமாக திகழ்கிறார். நவீனகாலத்துக்கு தேவையான முறையில் கிழக்கு இளம் சந்ததிகளையும் தயார்படுத்திய ஒரு ஆளுமை அரசியலிலும் கனவான் தன்மையுடன் திகழ்ந்து பிரதியமைச்சராக பல்வேறு பணிகளை இந்த நாட்டுக்கு செய்துவிட்டு விடைபெற்றிருக்கும் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தின் ஒருவரான முன்னாள் பிரதியமைச்சரும், பிரபல தொழிலதிபருமான எம்.எம்.எம். முஸ்தபா அவர்களின் காலமானார் என்ற செய்தி கிழக்கு முஸ்லிம் அரசியலில் தாக்கம் செலுத்தும் செய்தியாகவே அமைந்துள்ளது. என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக அக்கறை காட்டிய அன்னாரின் சமூக சிந்தனை நீடித்து நிற்க வல்லது. தொழிநுட்ப கல்வியை கிழக்குக்கு அறிமுகப்படுத்திய மயோன் முஸ்தபா அவர்கள் நிறையவே கல்விப்பணிகளை இந்த நாட்டின் அடுத்த கட்ட நகர்வுக்கு செய்துள்ளார். புதுமைகளையும், மாற்றங்களையும் அதிகம் விரும்பிய அன்னாரின் சமூக பற்று மரபு அரசியலிலிருந்து மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அரசியலில் செல்வாக்கு செலுத்திய அவர் இந்த நாட்டின் தலைவர்களாக இருந்த பலருடனும் நெருங்கிய உறவை கொண்டிருந்தார். மொழியாற்றல் நிறைந்த அவரின் பேச்சுக்கள் பாராளுமன்றத்தில் நாட்டை நேரிய பாதைக்கு அழைத்துச்செல்லும் விதமாக அமைந்திருந்தது.
அன்னாரின் இழப்பு பேரிழப்பாகவே நோக்கவேண்டியுள்ளது. இழப்பினால் துயருற்ற அனைவருக்கும் எமது ஆறுதல்கள் அன்னாருக்கும் எமது பிராத்தனைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments