சவூதி அரேபியாவில் வசிக்கும் மாணவி ரபா றிஸ்வான் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!.
கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பழைய மாணவரான எஸ்.எம். றிஸ்வான் அவர்களின் செல்வப் புதல்வி ரபா றிஸ்வான் உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட பணத்தில் தனது தந்தையும், தாயும் கல்வி கற்ற பாடசாலையில் கல்வி கற்கும் வருமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு புத்தகப்பையும், அப்பியாசக் கொப்பிகளையும் வழங்கி வைத்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவி ரபாவின் பெற்றோர்கள், சகோதரர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது முஹர்ரம் புதுவருடத்தை முன்னிட்டு பாற்சோறு வழங்கி அவர்களோடு சேர்ந்து முஹர்ரமை கொண்டாடினர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் மாணவி ரபாவை பாராட்டி பாடசாலை சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
KMCC MEDIA UNIT
No comments