ஜனாஸா அறிவித்தல் - ரபாத் அமீன் (முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின் அன்புத் தாயார் காலமானார்.
நல்லாந்தழுவையை பிறப்பிடமாகவும், விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹும்களான மொஹிதீன் பாவா, றுக்கையா உம்மா ஆகியோரின் அன்பு மகள் ஹாஜியானி லைலா உம்மா காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் மர்ஹும் அப்துல் ரஷீது அவர்களின் அன்பு மனைவியும், சித்தி ரபீக்கா, றஸீபா, அல்ஹாஜ் ரபாய்தீன், றபாத் அமீன் ஆகியோரின் அன்புத் தாயாரும், அல்ஹாஜ் கலீல், மர்ஹும் நஜீம், நஜிமுன்னிஸா, நஸீஹா ஆகியோரின் அன்பு மாமியாரும் மற்றும் ( கொத்தான்தீவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர்) - அபூதாஹிர் - (காதர் மாஸ்டர்), மர்ஹும் ஆசியா உம்மா, தையூப், யூசுப், ஹதீஜா உம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (23) அஸர் தொழுகையுடன் விருதோடை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها ، وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ.
தகவல்
மகன் ரபாத் அமீன்
முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்.
No comments