Breaking News

உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும் வகையில் சிரமதானப்பணி

(சியாஉர் ரஹ்மான் - பறகஹதெனிய) 

எதிர்வரும் ஹஜ்பெருநாள் தினத்தில் உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றும் வகையில் பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் 25 ஞாயிறு அன்று சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.


உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்க்கான குறித்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பிரதான நோக்கில் பறகஹதெனிய இளைஞர் சங்கத்தினால் இச் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


மேலும் இதில் நிர்வாகசபை உறுப்பினர்கள், ஜமாத் அங்கத்தவர்கள், இளைஞர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தமது ஒத்துழைப்பை வழங்கும் வகையில் இச் சிரமதானப்பணியில் கலந்து கொண்டனர்.







No comments

note