முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்
பாறுக் ஷிஹான்
114/5, பூனைந்தவத்த, கலால்பிடிய, உக்குவலையைச் சேர்ந்த இமாம்தீன் ராசித் அப்துல்லா முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக (Justice of the Peace for the Whole Island) நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டு, மாத்தளை மாவட்ட நீதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் கடந்த புதன்கிழமை (31.05.2023) செய்துகொண்டார்.
இமாம்தீன், நஜிமா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் சமுக சேவையாளராகவும், நீதி அமைச்சில் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
No comments