சவூதிஅரேபியா மன்னர் ஹாலித் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!
அல்லாஹ்வின் பேரருளால் 02/06/2023 வெள்ளிக்கிழமை அப்ஹா மன்னர் காலித் பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் இளமானி பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கனகச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியது.
அஷ்ஷைஃக் பர்ஷாத் (கபூரி) MA reading அவர்களின் தலைமையில், அஷ்ஷைஃக் நிஜாம் (ஹாமி) தொகுத்து வழங்கி , அஷ்ஷைஃக் இல்முதீன் ( காஷிபி) அவர்களின் குர்ஆன் பாராயணத்துடன் ஆரம்பமானது.
அடுத்து அஷ்ஷைஃக் பர்ஷாத் (கபூரி) தலைமையுரையும் வரவேற்புரையும் நிகழ்த்தி சபையோரை இன்முகத்துடன் வரவேற்று , நிகழ்வின் கதாநாயகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
அடுத்து நஜ்ரான் பல்கலைக்கழக பேராசியரும் மன்னர் காலித் பல்கலைக்கழக இலங்கை மாணவர்களின் ஆலோசகரும் பேராசிரியர் அஹ்மத் அஷ்ரப் அவர்களுடைய வாழ்த்துச்செய்தியும் நிகழ்நிலை வாயிலாக இடம்பெற்றது.
அடுத்த நிகழ்வாக கௌரவிக்கப்படும் மாணவர்களுகாக அழகிய கவி வரிகளை கோர்த்து சபையோர் மற்றும் கதாநாயகர்களது செவியில் இங்கிதமாய் அமுதமிட்டுச்சென்றார் அஷ்ஷைஃக் அர்ஷத் (பலாஹி) அவர்கள்.
இதனையடுத்து கௌரவிக்கப்படும் மாணவர்கள் தங்களின் நான்கு வருட கல்விப்பயணத்தின் அனுபவ முத்துக்களை சபையோருடன் பகிர்ந்து கொண்டதுடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றியும் கூறினர்.
பின்பு இறுதி நிகழ்வாக கௌரவிப்பு நினைவுச்சின்னம் வித்தியாசமான சிறந்தொரு முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்காக கௌரவிக்கப்படுபவர்களது இலங்கை கல்லூரிகளின் அதிபர்களதும், ஆசிரியர்களதும் வாழ்த்துச்செய்தி, நிகழ்நிலையூடாக ஒளிபரப்பப்பட்டு கௌரவ நினைவுச்சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்விற்காக இரவுபகலாக , பொருளாளும் உடலாலும் சிந்தனையாலும் கஷ்டங்கள் சுமந்து ஏற்பாடு செய்த ஒவ்வொரு ஒன்றிய உறுப்பினர்களுக்கும் ஆயிரம் கோடி நன்றிகளை ஒன்றியம் சார்பாக தெரித்துக்கொள்கினறோம்.
No comments