பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 68 ஆவது நிறைவாண்டு விழா!.
பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 68 ஆவது நிறைவாண்டு விழா (21- 06 - 2023) கடந்த 21 ஆம் திகதி பாடாசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஹனிபா தலைமையில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகுஅலாவுதீன், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், முன்னாள் அதிபர்களான அஷ்ஷெய்க் இஸட்.ஏ. ஸன்ஹீர் (கபூரி), என்.எம்.எம்.நஜீப், கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.நஜீம் (ஷர்கி), ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றலோடு இடம்பெற்றது.
கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயமானது 1955 - 06 - 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 21 ஆம் திகதி தனது 68 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments