Breaking News

அல் - ஹாபிழ் ஐயூப்கான் (பலாஹி) அவர்களின் மறைவுக்கு முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைஸர் மரிக்கார் அனுதாபம்.

அல் ஹாபிழ் ஏ.ஏ. ஐயூப்க்கான் (பலாஹி)  அவர்களின் மரண செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என்னை பொருத்த மட்டில் உலமாக்களுக்கு ஒரு  முன்ணுதாரணமாக   அல் -  ஹாபிழ்  ஏ.ஏ ஐயூப்க்கான் அவர்களை காண்கிறேன். அவரோடு  பழகிய  25   வருட காலத்தில் சிறந்த உலமாவாக, சகோதரனாக, நண்பனாக   தென்பட்டார் என அன்னாரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


மறைந்த அல் - ஹாபிழ் ஐயூப்கான் (பலாஹி) அவர்கள் எமது மஹ்ல்லாவில் 18 வருடம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக பணியாற்றி எமது பள்ளியை புதுப்  பொழிவுடன் அமைப்பதற்கும் எமது ஊர்  மக்களை  இபாதத்தின் பக்கம் அழைப்பதிலும்  ஊரின் ஒற்றுமையை பாதுகாப்பதிலும் மட்டுமன்றி இன்னோறன்ன  நற்பணிகளை செய்வதிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது. 


எனவே அல் ஹாபில் ஏ.ஏ ஐயூப்க்கான் அவர்களின் மரணம் ஒரு சரித்திரமாக இருக்கும் அதவேளை அன்னாரின் மரணத்தினால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் துயரிலிருந்து  மீள அல்லாஹு தஆலா அருள் பாளிப்பதோடு அன்னாருக்கு  ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா  என்னும் சுவன பாக்கியம் கிடைப்பதற்கு இருகரமேந்தி வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.      

                                                                                                                  ஆமின்.


கே.எம்.எம். பைசர் மரிக்கார்.

முன்னாள்  கல்பிட்டி பிரதேச சபை  உறுப்பினர்.




No comments

note