குருநாகல் மாவத்தகம, பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற "இப்தார்" நிகழ்வு
- சியாஉர் ரஹ்மான்- பறகஹதெனிய
மாவத்தகம, பிரதேச செயலகத்தின் வரலாற்றில் முதல் முறையாக புனித ரமழான் மாதத்தில் "இப்தார்" விஷேட நிகழ்வொன்று பிரதேச செயலாளர் எம்.எஸ். ஜானக அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக 11 செவ்வாய் அன்று மாவத்தகம, பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சர்வ மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மத விடயங்களைப் பற்றிய தெளிவு, ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த "இப்தார்" நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சிங்கள மொழியிலான மார்க்க விளக்க சொற்பொழிவொன்றை மெளலவி கலீலுர் ரஹ்மான் நிகழ்த்தினார். இலங்கையில் வாழும் மக்கள் என்ற வகையில் நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒற்றுமை, ஐக்கியத்துடன் வாழ்வது மிக அவசியமாகும். இஸ்லாமியர்கள் புனித ரமழான் மாதத்தில் நோன்பு இருக்கின்றனர். இதனால் பசித்திருந்து அவர்களின் மத விடயங்களில் வழிபடுகின்றனர். எனவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இருந்தது. அந்த வகையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சமூக ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட எம்முடன் பணியாற்றுகின்றவர்கள் அனைவருக்கும் தனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதேச செயலாளர் தனது உரையில் தெரிவித்தார்.
இவ் "இப்தார்" நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகள் மாவத்தகம நகரின் வர்த்தகர்கள் உள்ளிட்ட சமூக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவகர்கள் மற்றும் கிராம, சமூர்த்தி உத்தியோகத்தர்கள், செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments