Breaking News

வறுமையிலும் பிறர் நலம் காப்போம்.

பு/பெருக்குவட்டான்  அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்யாலயத்தின் அதிபர் எம்.எச்.எம். றாஸிக் மற்றும் ஆசிரியர்களான ஏ.ஆர். சம்சுதீன், என்.எம். றிப்கான் ஆகியோரின்  முயற்சியினால்  200.000/=  (இரண்டு இலட்சம்) ரூபா பெருமதியான பயிற்சிப் கொப்பிகளை பெருக்குவட்டானைச் சேர்ந்த  பாடசாலையின்  பழைய மாணவர்களில் ஒருவரான எம்.சாதிக்  அவர்களின்  ஏற்பாட்டின் மூலம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 


2022ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தவும்,  அக்கிராமத்தில் வறுமையில் வாடும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியடைய வேண்மென்ற நன்நோக்குடனும் இவ் உதவியை செய்துள்ளார்.


வறுமைக்கு மத்தியில்  கூலித்தொழில் செய்து (தேங்காய் ஆய்ந்து) தனது அன்றாட வாழ்வினை நடாத்திவரும் எம்.சாதிக்கின் இத்தர்மச் செயல் எம் அனைவருக்கும் முன்மாதிரியாய் அமையுமென எதிர்பார்க்கின்றோம் என வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எம். றாசிக் தெரிவித்துள்ளார்.


இவரின் தர்மத்தினை இறைவன் பொருந்திக் கொண்டு வாழ்வில் பரக்கத் செய்வானாக! ஆமீன்


"கற்பவனாக இரு கற்பிப்பவனாக இரு அல்லது கற்பதற்கு  உதவி செய்பவனாக  இரு நான்காம் நபராக  இருந்து  விடாதே!"


தேசகீர்த்தி

எம்.எச்.எம். றாசிக்  - SLPS - 1

அதிபர் 

அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயம்

பெருக்குவட்டான்.





No comments