சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விஷேட இலவசக் கருத்தரங்கு
சியாஉர் ரஹ்மான் - பறகஹதெனிய -
2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தொடரின் முதலாவது கருத்தரங்கு 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பி.ப.4:00 மணி வரை பறகஹதெனிய மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) யின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
"தமிழ் மொழி" பாடத்துக்கான இக்கருத்தரங்கு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையுடனும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பூரண ஆதரவுடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கு ஆசிரியர் எம்.எம்.எம். ரலீன் அவர்களால் நடாத்தப்பட்டதோடு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடத்தினை இலகுவான முறையில் எதிர்கொள்வதற்கான பரீட்சை வழிகாட்டல், கட்டுரை அமைப்பு, சுருக்கம் எழுதும் முறைகள், பந்தி எழுதும் போது விடும் தவறுகளை தவிர்த்தல் தொடர்பான அம்சங்கள் அடங்கிய விரிவுரை வழங்கப்பட்டது..
ஆரம்ப நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க உபதலைவர் எஸ்.ஏ.எம். ஷஹீட், பாடசாலையின் உதவி அதிபர் றிஃபாஸ் உள்ளிட்ட பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
எதிர்வரும் வாரங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள இக்கருத்தரங்கு தொடரில் ஏனைய பாடங்களுக்குமான இலவச விசேட கருத்தரங்குகளை பிரபல வளவாளர்களினால் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments