குருநாகல் மாநகர சபையின் புதிய மேயராக சுமேத அருணசாந்த தெரிவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான குருநாகல் மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுமேத அருணாசாந்த இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் குருநாகல் மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
சுமேத அருணசாந்த பத்து வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் விஜயானந்த வெடிசின்ஹ ஆறு வாக்குகளையும் பெற்றுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் சபையில் நிறைவேற்றப்படாமை காரணமாக முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து மேயர் பதவி வெற்றிடமாகியிருந்தது. மேயர் அருணாசாந்த எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் போட்டியிடும் உறுப்பினராவார். மேலும் குருநாகல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆங்கிலப்பாட ஆசிரியருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஆர். சியாஉர் ரஹ்மான்
(பறகஹதெனிய)
No comments