Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பௌதீகவியல் ஆசிரியர் ஏ.எஸ்.எம். மாஹீர் ஓய்வு பெறுகின்றார்.

✍️ ஏ.எச். பௌசுல் ஆசிரியர்

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பௌதீகவியல் ஆசிரியர் ஏ.எஸ்.எம். மாஹீர் 2023.01.31 ஆம் திகதி ஆசிரியர் சேவையிலிருந்து  ஓய்வு பெறுகின்றார்.


இப்பாடசாலையின் விஞ்ஞான துறையை கட்டியெழுப்பிய ஒரு உன்னதமான ஆசிரியர் தனது 35 ஆவது  வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இவர் பாடசாலையில் பல வைத்தியர்களையும், பல்வேறுபட்ட விஞ்ஞான பட்டதாரிகளையும் உருவாக்கி கடையாமோட்டை பாடசாலையை இலங்கையிலுள்ள பிரபலமான பாடசாலையின்  பட்டியலில் இணைத்த  பெறுமை இவரையும் சாரும்.


இவர் தனது ஆசிரியர் சேவைக் காலத்தில் தன்நலன்களை விட மணவர்களின் நலன்களையே முதன்மைப்படுத்தி செயற்பட்டா ஓர் உன்னதமான ஆசானாவார். எனவே இவரது சேவையை  பாடாசாலையின் அதிபர், ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் ஆகியோர் மெச்சுவதுடன் பாராட்டியும் வழியனுப்புகின்றார்கள்.


அவரைப் பற்றி ஒரு சில வசனங்கள் எழுதலாம் என நினைக்கின்றேன்.


அப்துல் சுக்கூர், அஸ்மா உம்மா தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையாக 1966.12.20 ஆம் திகதி மன்னார் முசலி எனும் கிராமத்தில்  பிறந்தார்.  இவரது  ஆரம்பக் கல்வி ம/முசலி மகா வித்தியாலயத்தில் பெற்று  க.பொ.த. உயர் தரக் கல்வியை (கணிதப்பிரிவில்) , ம/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் (1985 - 1987)  காலப்பகுதியில்  திறமையாகக் கற்று  கணிதப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார்.


இவர் யாழ்பாணம் பல்கலைக்கழகத்துக்கு Bsc  கற்கைக்கு தெரிவு செய்யப்பட்டு கற்று களனி பல்கலைக்கழகத்தில் 1994 ஆம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல பட்டப் பின்படிப்புகளையும் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில்  2000 ஆம் ஆண்டு  திறந்த பல்கலைக்கழகத்தில் (PGDM)  Post Graduate Diploma Managment  யும், 2010 ஆம் ஆண்டு முறட்டுவ பல்கலைக்கழகத்தில்  (PGDIT) Post Graduate Diploma in Information Technology) கல்வி தகமைகளை வளர்த்துக் கொண்டார்.


இவர் இக்கல்லூரிக்கு கடமையாற்றுவதற்கு முன் குருநாகல் - அலபடகம அல் - அமீன் மத்திய கல்லூரியிலும், பு/கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையிலும் சேவையாற்றியது குறிப்பிடத்தக்கது.


இவரது குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் 1994 ஆம் ஆண்டு முசலியை பிறப்பிடாமாகக் கொண்ட ஆபியத் ஆசிரியை  கரம்பிடித்து நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இவருடைய பிள்ளைகளில் ஒருவரான எமது பாடசாலையின் பழைய மாணவி  ஸமீஹா இப்பாடசாலையில் உயர் கல்வி கற்று  ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் (MBBS) மருத்துவ பட்டப்படிப்பை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.




No comments

note