Breaking News

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

சியாஉர் ரஹ்மான் (பறகஹதெனிய) 

இலங்கையின் சுதந்திரப் போராட்டம் பிரித்தானிய பேரரசிலிருந்து சுதந்திரம் பெற்று தனது சுயராஜ்யத்தை 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி நிறுவிக் கொண்டது. அந்த அடிப்படையில் குருநாகல், மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பறகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய பள்ளிவாசலில் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் பள்ளிவாசலின் நிர்வாக சபைத் தலைவர் அல் - ஹாபிழ் ஜெஸ்மின் (ரஹ்மானி) தலைமையில் இடம்பெற்றது. 


ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் ஒலிபெருக்கியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியினை பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மற்றும் உபதலைவர் அல் ஹாஜ் பெளவுஸ் ஆகியோரால் ஏற்றி வைக்கப்பட்டது. 


மேலும் பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் பறகஹதெனிய பிரதேச கிராம சேவகர் பிரியதர்சனி பெரேரா, நிர்வாக சபை செயலாளர் மொஹமட் இர்சாத், பறகஹதெனிய மத்திய கல்லூரியின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எஸ்.எம். இஸ்தார் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.








No comments

note