75 ஆவது தேசிய சுதந்திர தினம் சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஷம்ஸ் பாடசாலையில் அனுஷ்டிப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது கமு/கமு மழ்ஹருஸ் ஷம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இன்று (04) சனிக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி றிப்கா அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி என்.எம்.ஏ. மலீக், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ. ரஹீம், பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டின் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட மரணித்த போராளிகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
பாடசாலையின் பிரதி அதிபர் தன்சில் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாணவர்களின் நிகழ்வுகளும் அதிதிகளின் உரைகளும் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
No comments