Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக மீண்டும் ஹரீஸ் எம்.பி நியமனம்

(சர்ஜுன் லாபீர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் நியமனம்


கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின்  தலைமையகமான தாறுஸ்ஸலாத்தில் இன்று(27) வெள்ளிக்கிழமை நடந்த கட்சியின் உயர்பீட கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரசியல் அமைப்பின் 20வது சீர்திருத்தம் மற்றும் 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டப் பிரேரணை ஆகியவற்றுக்கு கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் கட்சியின் தலைமையினால் பிரதித் தலைவர் பதவி மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகியவற்றில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




No comments

note