சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு பிரதியிடும் இயந்திரம் வழங்கி வைப்பு!
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம். மிஹ்ழார் (நளீமி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வளர்ந்து வரும் சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் பிரதியிடும் இயந்திரத்தை (PHOTO COPY MACHINE) வழங்கி வைத்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதுர்தீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான பிரதியிடும் இயந்திரத்தை (PHOTO COPY MACHINE) மாணவர்களின் பாவனைக்காக இன்று (16) உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
No comments