2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆனைக்குழு அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல்
தேர்தல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை இதற்கான காரணமாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயமாக இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பிய போது இவ்விடயம் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பதிலளித்துள்ளார்.
No comments