QURANIC STUDIES CENTER யின் முதலாவது பட்டமளிப்பு விழா - 2022
QURANIC STUDIES CENTER யின் முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த (24) ஆம் திகதி K.A.பாயிஸ் கேட்போர் கூடத்தில் "சுவனப் பாதையில் பதின்மப் பறவைகள்" எனும் தொனிப் பொருளில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.
அஷ்ஷேய்க் பவாஸ் (அஸ்ஹரி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் இஸ்லிஹியா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளரும், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் கிளையின் தலைவருமான அஷ்ஷேய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) கலந்து சிறப்பித்ததோடு, கௌரவ அதிதியாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் அஷ்ஷேய்க் எம்.எச்.எம். ஹுசைர் இஸ்லாஹி கலந்து சிறப்பித்தார்.
கனமூலை பிறப்பிடமாகவும், கபூரிய்யா அரபுக் கல்லூரி மற்றும் அல் அஸ்ஹரி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான ஆர்.பவாஸ் முஹம்மத் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் Quranic Stadies Center புத்தளத்தில் மாலை நேர வகுப்பாக இயங்கி வருகின்றது.
முன் கட்டிளமைப் பருவ மாணவர்களது அறிவு, ஆன்மீகம், ஆளுமை விருத்தியை மேம்படுத்துவதோடு அல்குர்ஆனுடன் நல்லுறவை பேணக்கூடிய, பண்பொழுக்கமுள்ள ஓர் இளைய தலை முறையை உருவாக்குதல் எனும் இலக்கோடு கடந்த ஐந்து வருடங்களாக தனது பணியை Quranic Studies Center தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் அனுமதி பெற்று தமது இரண்டு வருட கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்கள் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments