Breaking News

சாய்ந்தமருது ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் மர்ஹும் அல்ஹாஜ் எம் ஐ.எம்.அஸ்றப் ஒரு சரித்திரம்

அஸ்ஹர் இப்றாஹிம்

தனது 68 வது பிறந்த தினத்தன்று  இறைவனின் அழைப்பை ஏற்ற  ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர் அல்ஹாஜ் எம் .ஐ.எம்.அஸ்றப் சமூகத்தில் ஒரு காத்திரமான  பாத்திரத்தை ஏற்றிருந்தார்.


24.12.1954ஆம் ஆண்டு மாளிகைக்காட்டில் ஓய்வு பெற்ற சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய ஸ்தாபக அதிபர் மர்ஹும் ஏ.ஸி.எம்.இப்றாஹிம் , மர்ஹுமா ஹாஜியானி கதீஜா யாசின்பாவா  ஆகியோருக்கு தலைமகனாக பிறந்து சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் , குருநாகல்  பக்மீகொல்ல அல்மினா மகா வித்தியாலயம், கம்பளை ஸாஹிரா தேசியக் கல்லூரி , மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி ,, கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆகியவற்றில் தனது கல்வியை தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞான சிறப்புப் பட்டதையும்(  Bsc)  பெற்றுக் கொண்டார்.


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த அதே வேளை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி இலங்கை வங்கியில் உத்தியோகஸ்தராகவும் நியமனம் பெற்று உயர்கல்வியையும் தொழிலையும் சம காலத்தில் மேற்கொண்டிருந்தார்.


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து முதன்முதலில் உயிரியல் விஞ்ஞான துறைக்கு (  Bsc)தெரிவு செய்யப்பட்டமூன்று  மாணவர்களுள்  இவரும் ஒருவராவார்.


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் உதைபந்தாட்ட துறையில் முதன்மை வீரராக திகழ்ந்ததால் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அதிபர் இவரை சிறிது காலம் தனது கல்லூரியுடன் இணைத்துக் கொண்டார்.


இலங்கை வங்கி உத்தியோகஸ்தர்களுக்கான தேசிய ரீதியிலான கரம் சுற்றுப் போட்டியில் பலமுறை தேசிய சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு பல பதங்களைப் பெற்றவர்.


மாளிகைக்காட்டின் முதல் விஞ்ஞான பட்டதாரியும் , இலங்கை வங்கி உத்தியோகஸ்தரும் முகாமையாளரும் இவரே.


மர்ஹுமா ஹாஜியானி பெளஸியா இப்றாஹிம் , உம்மு றிபாயா பளீல் , ஓய்வு பெற்ற ஆசிரியரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான  எம்.ஐ.எம்.அஸ்ஹர் , சிரேஸ்ட புள்ளிவிபரவியல் உத்தியோகஸ்தர் எம்.ஐ.எம்.அஜ்வத்( Bsc) , கன்சுல் நெளபியா பாறூக் ஆகியோரின் மூத்த சகோதரரரும். ஓய்வுபெற்ற மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய ஸ்தாபக  அதிபர் அல்ஹாஜ் ஏ.எம்.இப்றாஹிம் , மர்ஹும் அல்ஹாஜ் எம்.எம்.பளீல் (ஜப்னா கோல்ட் ஹவுஸ்) ,, அல்ஹாஜ் எம்.எம்.எம்.பாறூக் (கொழும்பு ட்றேபரி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் , எம்.ஐ.ஆதம்பாவாவின்(  பாறூக் )சகலருமாவார்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.இல்ஹாம் ஜெஸீல் , எம் ஐ.இஸ்ஸதுல் பைஸானா , எம்.ஐ.பஸ்ஹான்( ஆசிரியை), எம்.எப்.அப்துல் பாஸித்( கலசம்) , எம்.எப்.எம்.அர்ஸாத் (PLC ), எம்.எப்.எம்.ஹாதிம் ( ஆசிரியர் , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி) , டொக்டர் எம்.எப்.பாத்திமா பஸ்லியா அரபாத், பெனாசிர் பாறூக், பியாஸா பாறூக் , அஸாட் பாறூக் ஆகியோரின் தாய் மாமாவுமாகும் 


1982 ஆம் ஆண்டு தனது தாய் மாமன் ஓய்வுபெற்ற அதிபரும் சாய்ந்தமருது , மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவருமாகவிருந்த மர்ஹும் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா , மர்ஹுமா பல்கீஸ் தம்பதிகளின் மூத்த புதல்வி எம்.எச் கன்சுல் பெளமியாவை கரம்பிடித்து ,  எம்.ஏ. ஹஸ்னா செர்பின் , எம் ஏ ஸிப்னாஸ் நஸ்ஹத் ( ஆசிரியை செளதிஅரேபியா ) , டொக்டர் எம்.ஏ.சிஜாபா சினாம் ஆகிய மூன்று புதல்விகளுக்கு தந்தையானார்.


சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் உரிமையாளர் எம்.எச்.எம்.நெளபர் , எம்.எச் அஹமட் நைஸர் (அவுஸ்திரேலியா) , எம்.எச்.இர்ஸாத் நபீல் (அவுஸ்திரேலியா) , எம்.எச்.கன்சுல் மெளபியா ஆகியோரின் மச்சானும்.


தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் பொறியியல் கலாநிதி அஸ்லம் சஜா , கணக்காளர் முஹம்மட் வலீத்(. செளதி  அரேபியா ) , டொக்டர் பஸ்லுல்  ஹக் ( குருநாகல் )ஆகியோரின் மாமனாரும், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மர்ஹும் முஹம்மட் ஸக்கியூ , எம்.எச்.சாதிக் , எம் எச்.எம்.தெளபீக் , எம்.எச் எம். சதாத்( றமீஸ்)(மாத்தளை) , எம்.எச்.எம்.சகாப் (தாரிக்  )ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரருமாவார்.


எம்.ஏ.அஹ்ஸன் அக்தர் அஸ்ஹர்,எம்.ஏ.அக்மல் ஸிபாக் அஸ்ஹர்(.துபாய்  ) , மர்ஹும் எம்.ஏ.அஸ்பாக் அஹமட் அஸ்ஹர் , எம்.ஏ.அல் அபான் அஸ்ஹர் , எம்.ஏ.பிர்னாஸ் ஜப்ரான் அஜ்வத் , எம்.ஏ.ஸீராஸ் அஜ்வத் , எம் ஏ.இன்மாஸ் அஜ்வத் , எம்.ஏ.அப்ரஸ் அஜ்வத் ஆகியோரின் பெரியப்பவுமாகும்.


கல்முனை , நிந்தவூர் , அக்கரைப்பற்று ஆகிய இலங்கை வங்கி கிளைகளில் வங்கி முகாமையாளராக கடமையாற்றி பலருக்கு பலவழிகளில் உதவி புரிந்து இறுதியில் பதவி உயர்வு பெற்று களுவாஞ்சிகுடி இலங்கை வங்கி கிளையில் முகாமையாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றார்.




No comments

note