முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் ஓட்டுத்தோழிற்சாலையை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை
அஸ்ஹர் இப்றாஹிம்
30 வருட காலமாக இயங்காமல் இருந்த முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் , ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரதேச செயலாளர், அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டதுடன் இன்னும் ஒரு சில மாதங்களில் குறித்த ஓட்டு தொழிற்சாலையை செயற்பாட்டுக்குரியதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments