Breaking News

கத்தார் நாட்டிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கட்டார் வாழ் இலங்கையரின் ஒன்று கூடலும் நடைபயணமும்

நூருல் ஹுதா உமர்

2022 கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சிறப்பிக்கும் முகமாக கத்தார் வாழ்  இலங்கையர்கள்  கத்தார் சூக் வபீக் மெட்ரோ நிலையத்தில் ஒன்று கூடி நடைபயணத்தை முன்னெடுத்தனர்.


இதன்போது  கத்தார் நாட்டில் வசிக்கும் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கத்தார் நாட்டு கால்பந்தாட்ட அணிக்கு ஆதரவை வழங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இனமொழி வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் இந்நிகழ்வில் ஒன்றிணைந்து தங்களது ஆதரவை தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








No comments

note