தென்கிழக்கு பல்கலையில் பிரமாண்டமாக இடம்பெற்ற ஆர்.ஜே. வலையமைப்பின் "முப்பெரும்விழா- 2022"
நூருல் ஹுதா உமர்
மூன்றாவது ஆண்டை சிறப்பிக்குமுகமாக ஆர்.ஜே. வலையமைப்பின் ஏற்பாட்டில் வலையமைப்பின் தலைவர் ஏ.முஹம்மட் இன்ஸாப் தலைமையில் இடம்பெற்ற "முப்பெரும்விழா- 2022" நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் மண்டபத்தில் சனிக்கிழமை (26-11-2022) இடம்பெற்றது.
ஆர்.ஜே. வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஊடகம், சமூக சேவை உட்பட பல்வேறுதுறை சார் பிரமுகர்களும் இந்நிகழ்வில் சேவைநலன் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக கலை, கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிரதிப்பணிப்பாளர் வஸீர் அப்துல் ஹையூம் கலந்து கொண்டார். மேலும் சம்மாந்துறை உலமா சபை தலைவர், செயலாளர், பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர், சிலோன் மீடியா போரம், முஸ்லிம் மீடியா போரம் போன்ற ஊடக அமைப்புக்களின் முக்கிய பிரதானிகள், பிரபல ஊடகவியலாளர்கள், பாடசாலை அதிபர்கள், முஸ்லிம் பெண்கள் அமைப்பு, அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா போன்ற சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், வெற்றிபெற்ற போட்டியாளர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சமூக மேம்பாட்டில் ஊடகங்களின் பங்களிப்புக்கள், பல்கலைக்கழகங்களுக்கும் பொதுமக்களுக்கும் உள்ள தொடர்புகள், நாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் பாவனை தடுப்பு தொடர்பில் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக கலை, கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் உரைநிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments