திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் - 2022: ரெஸா மற்றும் ஜன்னத் ஹுல் தங்கம் வென்று சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் - 2022 (Open International Karate Championship) போட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
Open International Karate Championship ஜுனியர் பிரிவில் காத்தா, குமிதே போட்டியில் எம்.ஆர்.எம்.ரெஸா மற்றும் எம்.எஸ்.எம்.ஜன்னத் ஹுல் ஆகியோர் வெற்றி பெற்று தங்கப்பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.
International Martial arts Association இலங்கை கிளையின் தலைவர் பிரதம போதனாசிரியர் முகம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் பிரதிநிதியாக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபைத் தவிசாளர் பேராசிரியர் ஏ. ஜவ்பர் மற்றும் விளையாட்டு ஆலோசனை சபை உறுப்பினர்களான விரிவுரையாளர்கள், விடுதிப் பணிப்பாளர் யூ.எல். மன்சூர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments