Breaking News

ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் வெளியிடப்பட்ட 3 ஆவதுஅவரி அவிழ்கை விழா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 3 ஆவது அவரி சஞ்சிகையின் அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா)  சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் வாயிலாக இடம்பெற்றது.


ஸ்ரீலங்கா பென் கிளப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைப் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 


விஷேட  அதிதியாக ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் தலைவியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புர்கான் பீ இப்திகார் கலந்து சிறப்பித்தார்.


பேஜஸ் அறிவு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் ஆய்வாளருமான சிராஜ் மசூர் நூல் பற்றிய விமர்சனத்தை நிகழ்த்தியதுடன் அவரி 3 ஆவது சஞ்சிகையின் ஆசிரியராக லைலா அக்ஷியா செயற்படுகிறார்.


இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா பென் கிளப்பின் உபதலைவர் என்.எம். ஆரிபா வரவேற்புரையையும் தலைவி மஷூறா கஹூறுத்தீன் தலைமையுரையையும்,  அவரி சஞ்சிகையின் 3ஆவது வெளியீட்டின் ஆசிரியர் லைலா அக்ஷியா பதிலுரையையும் வழங்கியதுடன் ஏறாவூர் ஜிப்ரியா பாடல் ஒன்றையும் பாடினார்.


அத்துடன் கிளப்பின் நிர்வாக உறுப்பினர்களான எம்.பி.பர்ஸானா நன்றியுரையை வழங்கியதுடன் பிரதி அதிபர் றிப்கா அன்ஸார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை சிறப்பாக செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








No comments

note