அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடி துறைமுக வாயிலுள்ள மண்ணை சமநிலைபடுத்துவதற்கு அக்கரைப்பற்று மாநகர சபை இயந்திரங்கள் வழங்கி வைப்பு
நூருல் ஹுதா உமர்
அம்பாரை மாவட்ட மீனவர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகளை ஏற்று, ஒலுவில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடி துறைமுக வாயிலுள்ள மண்ணை சமநிலைபடுத்துவதற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் Excavator மற்றும் தெப்பம் போன்ற இயந்திரங்களை இன்று(16) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி கையளித்தார்.
கடந்த ஒரு மாத காலமாக ஒலுவில் மீனவர் துறைமுக வாயில் மண்ணை சமநிலைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளை மேலும் துரிதப்படுத்த அக்கரைப்பற்று மாநகர சபை இவ்வுதவியினை செய்வது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த அம்பாறை மாவட்ட மீனவர்களின் நலன்கருதி இப்பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க உதவிக்கரம் நீட்டிய அக்கரைப்பற்று மாநகர சபைக்கும், அதன் முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களுக்கும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தமது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.
இதன் போது அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாஸ் உட்பட மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments