இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதானார்.
இலங்கை ஆசிரியர் சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன் கைதானார்.
ஆசிரியர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்த போது இவரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி அரச எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு ள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதிபர் ஆசிரியர் சம்பள உயர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து போராட்டம் வெற்றி பெற இறுதி வரை துணிச்சலுடன் போராடிய ஒரு நேர்மையான தொழிற் சங்கத் தலைவராக இவர் ஆசிரியர் சமூகத்தால் மதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments