விமானிகள் தூங்கியதால் தாமதமாக தரை இறங்கியது விமானம்
எதியோப்பியாவில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் அதன் விமானிகள் இருவருக்கும் தூங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இவர்களுக்கு தூக்கம் வந்துள்ளது.
பயண எல்லை வந்த போது தரையிறங்கும் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அபாய ஒலி எழுப்பிய பின்பே இவர்களது தூக்கம் கலைந்துள்ளது. இதனால் 25 நிமிடங்கள் தாமதித்தே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலைமையால் இவ்விமான நிலையத்தில் அடுத்து தரையிறங்க இருந்த விமானம் சுமார் 2 1/2 நிமிடங்கள் கழித்தே தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
No comments