போட்டியிலிருந்து விலகினார் எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச
பாராளுமன்றத்தில் இன்று (19) ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை சஜித் பிரேமதாச பிரேரிக்க ஜீ.எல்.பீரிஸ் ஆமோதித்தார்.
நாளை (20) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான போட்டியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவினை ஆதரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments