அல்-ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் சுற்றுமதில் திறப்பும் உபகரணங்கள் கையளிப்பும்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
தந்தையற்ற பிள்ளைகள் கற்றுவரும் மூதூர் அத்பால் கல்வி நிலையத்துக்கான சுற்று மதில் திறப்பும் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (21) நடைபெற்றது.
இக்கல்வி நிலையத்துக்கு அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் ஏற்பாட்டினால் 300 அடி சுற்று மதில் அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் இக்கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான 30 டம்ரோ அலுமாரிகள், 30 கட்டில்கள், 30 மெத்தைகளும் வழங்கப்பட்டன.
மேலும் மின் துண்டிக்கப்படும்போது கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஜெனரேட்டர் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
அதேநேரம், டீ பிரசர் பிரிட்ஜ், கற்றலுக்குத் தேவையான கதிரைகள், மேசைகள் போன்றனவும் வழங்கப்பட்டு, கல்வி நிலையம் புனரமைப்பும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், துருக்கி நாட்டு தொண்டு நிறுவனமான IHHNL நிறுவனத் தூதுவர் முஸ்தபா குரு, அவரின் பாரியார் கயா, அல்-ஹித்மதுல் உம்மா பௌண்டேசனின் தலைவர் கஸ்ஸாலி முகம்மது பாத்திஹ், மூதூர் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோருடன் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
No comments