Breaking News

கிண்ணியாவைச் சேர்ந்த சமூக சேவகி எஸ். நளீமாவுக்கு இந்தியாவில் கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இந்தியாவின் ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பின் தலைமை அலுவலகமான சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் இலங்கை பெண்கள் உதவி அமைப்பின் தலைவியும் சமூக செயற்பாட்டாளரும் பெண் ஆளுமையுமான கிண்ணியாவைச் சேர்ந்த செய்னுலாப்தீன் நளீமா தனது சமூகசேவைக்காக அண்மையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


அத்தோடு, ஐக்கிய மக்கள் பாதுகாப்பு நுகர்வோர் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதியாகவும் இவர் நியமிக்கப்பட்டார். அதற்கான அடையாள அட்டையும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.


ஐக்கிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் அமைப்பின் நிறுவனத் தலைவர் லயன் அம்பாசிடர் முனைவர் ந. இராமசந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் ஏ.செல்வராஜ், மாநில பொதுச் செயலாளர் முனைவர் என்.என்.வர்மன், மாநில செயலாளர் முனைவர் ஜீீ.மணிவண்ணன், மாநில மக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ்.குணசேகரன், மாநிலத் தலைவர், லஞ்ச ஒழிப்புப் பிரிவு மருத்துவர் பூபாலன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கே.மகேந்திரன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் மற்றும் அமைப்பின் புதிய பொறுப்பாளர்களான பிரகாஷ், சுந்தர், தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.







No comments