ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு !
நூருல் ஹுதா உமர்
புனித ரமழானைச் சிறப்பிக்கும் முகமாக ஆர் ஜே கலை கலாசார ஊடக வலையமைப்பு தனியார் கல்வி நிறுவனமொன்றுடன் இணைந்து நடாத்திய ரமழான் சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் நாடளாவிய ரீதியில் முதல் 15 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப் போட்டி நிகழ்ச்சியில் இதன் போது தெரிவு செய்யப்பட்ட முதல் 15 வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சீகாஸ் உயர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் செயினுலாப்தீன் நஜிமுதின், ஆர் ஜே கலை கலாசார ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஏ.எம். இன்ஷாப் உட்பட பல்வேறுபட்ட முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments