ஏழுதிறன் வகுப்பறைகளும், மதில் தொகுதியும் திறந்து வைப்பு!
முல்லைத்தீவு அணிஞ்சியன்குளம் தமிழ் கலவன் வித்தியாலத்தில் ஏழுதிறன் வகுப்பறைகளும், மதில் தொகுதியும் கடந்த (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் அதிபர் திரு. தங்கராசா நிமலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கல்விப் பணிபாளர் (வடமாகாணம்) திரு. செல்வதுரை உதயகுமார் அவர்களும், சிறப்பு அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் (துணுக்காய்) திருமதி மாலதி முகுந்தன் அவர்களும், கௌரவ அதிதியாக HC 97 அறக்கட்டளை உபதலைவர் திரு. தவராஜா பிரதாப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலையின் பிரதாண மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் கஷ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி பாடசாலையானது அவ்வலயத்தில் அதிகூடிய ஏழுதிறன் வகுப்பறைகளைக் கொண்டமைந்ததாக ஒரு முதன்மை வாய்ந்த ஒரு ஆரம்ப பாடசாலையாக காணப்படுகின்றது. மேற்படி பாடசாலையில் துணுக்காய் வலயத்தில் அதிகூடிய ஆரம்ப கல்வி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமையும், இப்பாடசாலையானது அதிபர் பொறுபெடுத்து கடந்த இரண்டு வருடங்களில் ஏழுதிறன் வகுப்பறைகளை கொண்ட பாடசாலையாகவும், சுற்று மதில்கள் அமைக்கப்பட்ட அழகிய பாடசாலையாகவும் மிளிர்ந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும் .
No comments