Breaking News

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்ட ஊர்வலம்

 பாறுக் ஷிஹான்

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள்  போராட்ட ஊர்வலம்  ஒன்றினை  இன்று (19)முன்னெடுத்தனர்.


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  கல்வி  சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டியும் சம்பந்தப்பட்டவர்கள்   உடனடி நடவடிக்கை எடுக்குமாறும்  கோரி கல்வி பொது சாதாரண பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு கடமைக்காக வந்திருந்த ஆசிரியர்கர்  இவ்வாறு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அத்துடன் இப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள்  அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை வெளிப்படுத்தி தமது எதிர்ப்பினை வெளியீட்டு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.


மேலும்  வரிசையில் நிற்போரே உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிந்தியுங்கள் எரிபொருள் இல்லாமல் கடமையை தொடர முடியாது கொழும்பு பாடசாலைக்கு மட்டுமா எரிபொருள் பிரச்சினை போன்ற வாசகங்களை எழுதி கோஷங்களை போராட்டக்காரர்கள்  வலியுறுத்தினர்.











No comments