கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் கடையாமோட்டை தேசிய பாடசாலைக்கு 12 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு
பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் தலைமையிலான முகாமையத்துவக்குழு இன்று (06) கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்காரின் இல்லத்திற்கு சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டது.
இதன்போது பாடசாலையில் காணப்படும் குறைபாடுகளை முன்வைத்து பட்டியலிட்டனர். அதேநேரம் தற்போது அவசிய தேவையாக காணப்பட்ட பாடசாலையின் விளையாட்டு மைதானத்துடன் (மதுரங்குளி - தொடுவா வீதியில்) காணப்படும் பிரதான நுழைவாயிலை அமைத்து தரும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
முகாமைத்துவக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க உடனடியாக தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 12 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி எதிர்வரும் 18 ஆம் திகதி அதற்குரிய பூர்வாங்க வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு கூறி வாக்குறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் உப அதிபர்களான என்.எம்.எம்.முஜிபுர் ரஹ்மான், எம்.எம். பைஸல் மற்றும் முகாமையத்துவக்குழுவின் சிரேஷ்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
K.M.C.C. (N.S) MEDIA UNIT
No comments