Breaking News

கடையாமோட்டை தேசிய பாடாசாலையின் மாதிரி பலகை (SCHOOL PLANING BOARD) அஸ்ரின் அலாவுதீனால் அன்பளிப்பு!

பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கனமூலை எஸ்.ஏ. அஸ்ரின் அலாவுதீன்  அவர்கள் சுமார் 25,000/= செலவில் பாடசாலையின் மாதிரி பலகை (SCHOOL PLANING BOARD) அமைத்து கொடுத்துள்ளார்.


எஸ்.ஏ. அஸ்ரின் கல்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர்.எம்.எஸ். சேகு அலாவுதீன் (அன்ஸார்) அவர்களின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


அஸ்ரின் அலாவுதீன்  அவர்களுக்கு   பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்திக் குழு, பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.


K.M.C.C. (N.S) MEDIA UNIT








No comments