புத்தளம் IFM முன்பள்ளி பாலர் பாடசாலையின் 50 வருட பொன் விழா நிகழ்வு!
புத்தளத்தின் தொன்மையான வரலாற்றைக் கொண்ட IFM முன்பள்ளி பாலர் பாடசாலையின் 50 வருட பொன்விழா நிகழ்வு மற்றும் 2022 வருடத்துக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக இன்று (19) மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம். ரபீக் கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதிகளாகவும் அனுசரணையாளர்களாகவும் நகரசபை உறுப்பினர்களான ஆரிப் சிஹான் ரனீஸ் பதூர்தீன் தன்னார்வலர் சாமில் மற்றும் ஐ.தே.க.புத்தளம் தொகுதி முகாமையாளர் நுஸ்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தளத்தின் அரசியல்வாதிகள் வைத்தியர்கள் உட்பட பல பிரபலங்கள் இம்முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நகரபிதா இங்கு உரையாற்றுகையில் மறைந்த தலைவர் மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள்,சிறார்களின் கல்வி விருத்திக்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்ததுடன் அப்பணிகளை தானும் தடையின்றி தொடர்ந்து முன்கொண்டு செல்வதாகத் தெரிவித்ததுடன் தனது முன்பள்ளி பாலர் பாடசாலையும் இதுவே எனவும் ஞாபகப்படுத்தினார்.
கலை நிகழ்ச்சிகள்
இடம்பெற்றதுடன் அனுசரணையாளர்கள் மாணவச் சிறார்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்தனர்.
குறித்த பாலர் பாடசாலையை ஆசிரியை ரூஸி மற்றும் ஊடகவியலாளர் சனூன் ஆகியோர் திறம்பட நடாத்திச் செல்கின்றமை விஷேட அம்சமாகும்.
No comments