Breaking News

கிழக்கு மாகாணம் பூராகவும் ஐயாயிரம் மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர்

பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக கிழக்கு மாகாணம் பூராகவும் ஐயாயிரம் மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச  செயலகத்தின் செயலாளர் சி.ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.


இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயல உதவி பிரதேச செயலாளர் செ. பார்த்திபன், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜெ. ரகுபதி, உ. சுபராஜ், முகாமைத்துவ சேவை  உத்தியோகத்தர் வே.அரவிந்தன் மற்றும் பயிலுனர் பலநோக்கு அபிவிருத்தி உதவியாளர்களும் கலந்து கொண்டனர்.









No comments